புத்தாண்டு 2015

உலகில் எல்லாமே மாறுகிறது,முதிர்கிறது,வளர்கிறது புதிய பரிமாணத்தை அடைகிறது.இதை நாம் நன்கறிவோம்.சிலநேரங்களில் நாம் வாழ்க்கையின் மதிப்பையும் நேரத்தின் மதிப்பையும் உணர்ந்தவர்களாக இருக்கிறோம்.

சில நேரங்களிலோ,எவ்விதவிழிப்புணர்வும் இல்லாமல்,வெறுமனே பழக்க தோஷத்தில் வேலைகளை செய்பவர்களாக,சுரத்தில்லாமல்செயல்பட்டுக் கொண்டும் நிகழ்பவற்றுக்கு எதிர்வினை ஆற்றிக் கொண்டும் இருக்கிறோம்.

விழிப்புணர்வில்லாத வாழ்க்கை என்பது, நம் கணினியைப் போலத்தான். கணினியானது செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்து கொண்டே இருக்கும்.ஆனால் அதற்கு எவ்விதமான விழிப்புணர்வும் இருக்காது.

2115 ஆம் ஆண்டை இப்போது நினைத்துப் பாருங்கள்.நாம் எல்லோரும் வேறொரு பயணத்தில் இருப்போம்.இந்த உலகில் வேறு மனிதர்கள் இருப்பார்கள்.நாம் கண்டிப்பாக விடைபெற்றிருப்போம்.

விடைபெற்றிருப்போம் என்று சொல்வதே,நாமொரு பயணத்தில் இருப்பதை நினைவூட்டுகிறது.இலக்கைசெனறடைவது வாழ்வின் ஒரு பகுதி மட்டுமே.வாழ்வை வாழ்வதுதான் முக்கியமானது.

உயிர்ப்புத் தன்மையும்,திறந்த உள்ளமும், மனதில் புத்துணர்வும் இருந்தால் நம் உள்நிலை வழிகாட்டுதலை நன்குணர்ந்து பின்பற்றலாம்.

முன்னரே வடிவமைக்கப்பட்ட பழக்கங்களாலும்செயல்களாலும் ஒருவர் தன்வாழ்வை நடத்துவது அவருக்கே அவர் இழைத்துக் கொள்கிற அநீதி மட்டுமல்ல,பெரிதும் அலுப்பூட்டக்கூடிய செயலும் கூட.

நீங்கள் நின்றாலும் நடந்தாலும் ஓடினாலும் உலகையே சுற்றினாலும் விழிப்புணர்வின்றி செய்தால் மிகவும் பாரமாக உணர்வதுடன் வாழ்வே அர்த்தமில்லாமலும் இருக்கும்.

அன்பு
தெய்வீகமான அன்பு எந்தப் பலனையும் எதிர்பாராதது.நீங்கள் விரும்புகிற ஒருவருக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மட்டுமே உங்கள் அன்பு உரியதென்று அதன் எல்லையை நீங்கள் குறுக்கினால் உங்கள் சூழலும் நீங்கள் வாழ்கிற சமூகமும் உங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆனால் உங்கள் அன்பை ஒரு புன்னகையாகவோ, ஓர் உதவியாகவோ, இதம் செய்யும் அதிர்வாகவோ பிறருக்கு செய்யும் சேவையாகவோ உங்களால் பரப்ப முடிந்தால்அதுவே தியானம். அந்த அன்பு நிபந்தனையற்றதாக இருப்பதுடன் உங்கள் உள்நிலை தூய்மைக்கும் உறுதுணைசெய்கிறது.

இந்த உலகுக்கு அதிகம் தேவைப்படுவது அன்பு மற்றும் அமைதியின் கவசம்.அது நம்முள் நிறையவே இருக்கிறது.

2015 ஆம் ஆண்டு உலகுக்கு அமைதியைக் கொண்டு வரட்டும்.
உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

அன்பும் பிரார்த்தனையும் ..!

ஶ்ரீ விஸ்வ சிராசினி