பெளர்ணமி பித்து


உன்னதங்கள் ஒத்திசைக்க யோக வேகம் கூடுதம்மா
சக்கரங்கள் சுழலொளியில் ஸர்ப்ப சுருதி கேட்குதம்மா
சாம்பல் கொண்ட சூட்சுமதாரி சட சடயை வீர்ய யோகம்
வித்து அற்ற ஈஷதாரி ஓங்கிசைத்த உடுக்கை நாதம்

*********

வித்தகனின் பரி பாலனம் பிச்சி இவளுள் சிவ பித்து
சித்தமெல்லாம் தகி தகிக்க சிந்தைஎல்லாம் சர்ப்ப கூடல்
அசலன் அவன் ஆதிவாசி
சலனம் கொண்ட பிச்சி காசி வாசி

சிவ தருவாய்
தீர்வாய்.. தாக தனலை தோற்றுவித்தவன்
தன்னுரு மத்திம ஸ்தானத்தில் பிழம்பது சிவமாய்..
வரமாய் குருவாய் பலவாய் வந்த ஈஷன் என்னுள் தாகமாய் பரவி தாய்மையாய் வீற்றான்.

சிற்றம்பல ஏகபாதன் பற்றுள்ள இப்பேதையை பற்றி
வற்றாத கங்கை வரம் ஒன்று தந்தான்